Sunday, October 24, 2010
ஒரு தேடலின் தொடர்.
எதிர் வீட்டு மாடியில் ஒரு ஜோடி சிட்டுக் குருவிகளைக் கண்டு சந்தோஷமாக இருந்தது.அவை இரண்டும் அடிக்கடி பறந்து வந்து பக்கத்து வீட்டில் காக்கைக்கு வைத்திருக்கும் உணவை எடுத்துச் செல்லும்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.அவை கூடு கட்டி குஞ்சு பொரித்ததுவோ என்னவோ தெரியவில்லை.ஆனால் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்.சிறிது காலத்திற்கு பிறகு அந்த ஜோடிக் குருவிகளைக் காணவில்லை.அப்புறம் வரவேயில்லை.எங்கு போயிற்றோ, என்னவானதோ தெரியவில்லை.பெறு நகரப் பேரிரைச்சலில் குருவிகள் காணாமல் போய்விட்டனவோ?செல் போன் கோபுரங்களில்ருந்து வெளியாகும் மின் அலைகளின் தாக்கத்தால் குருவிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. முன்னேற்றம் என்ற பெயரில் நாம் அடைவது கொஞ்சமாகவும் இழப்பது அதிகமாகவும் இருந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் கூட இப்போதெல்லாம் செல்போன் கோபுரங்களும் டிவி அன்ட்டேன்னாக்களும் நிறையவே வந்துவிட்டன.எல்லா இடங்களிலும் குருவிகள் மட்டுமல்லாமல் இன்னும் என்னென்ன அழிவுகள் காத்திருக்கின்றனவோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment