Wednesday, October 27, 2010

engal oor-karukurichi.

மேலத்தெருவின் வடகோடியில் பள்ளீக்கூடம். மெல் நடுனிலைப்பள்ளி. எட்டாவதுவகுப்பு வரை இங்கு படிக்கலாம். அதற்குப் பிறகு மேல் படிப்புக்குப் பத்தமடைபக்கோ,வீரவநல்லூருக்கோதான். போகவேண்டும். கல்லூரிக்குத் திருநெல்வேலிக்குத்தான் போகவேண்டும். மேலத்தெருவின் தெற்க்குக்கோடியில் குளம். குளத்திற்கு எதிர் கரையில் சற்று தூரம் சென்றால் மலை. "கொழுந்திருந்தான் மலை". மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி இது. எங்கள் ஊர் மலை,வாய்க்கால், குளம் ஆகியவற்றிற்கு ஒரு வரலாறூ உண்டு. அனுமன் ஔஷத மலையை இலங்கைக்கு எடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன! கன்னடியன் என்ற பெயருடைய குறுனில மன்னர் மக்களின் நலனுக்காக குள்ங்கள் வெட்ட நினைத்தபோது அவரின் கனவில் அவர் ஒரு பசுவின்வாலைப் பிடித்துக்கொண்டு அந்தப் பசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து செல்வதுபோல் தெரிந்ததாம்.பசு சென்ற் வழியில் அது சில இடங்களில் படுத்து பிறகு எழுந்து சென்று ஒரு இடத்தில் மறைந்து விட்டதாம்! பசு போன வழியெல்லாம் வாய்க்காலும் படத்த இடங்களில் குள்ங்களும் வெட்டும்படி கனவில் தோன்றியதால் மன்னரும் அதுபோலவே செய்தாராம்.அவர் பெயரால் கன்னடியன் வாய்க்கால்,கன்னடியன் குள்ம் என்று இன்றும் வழங்கி வருகிறது! (thodarum)

No comments:

Post a Comment