திருநெல்வெலி மவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் காருகுறிச்சிதான் எங்கள் ஊர்.நான் சிறுவனாக இருந்தபொது இருந்த காருகுறிச்சியைப் பற்றித்தான் சொல்லப்பொகிறேன்.அழகிய சிறிய ஊர்.ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதி.உள்ளே வந்தால் கன்னடியன் வாய்க்காலும் குளமும்.அதைத்தாண்டி வந்தால் வட்க்கு தெற்க்காக இறண்டு தெருக்கள்.ஒன்று கிழக்குத்தெரு.மற்றொன்று மேற்க்குத்தெரு.இதுதான் அக்கிரகாரப் பகுதி.எங்கள் வீடு மேற்க்குத் தெருவில்தான் இருந்தது. ஊரைச்சுற்றி பசுமையான் வயல்கள். வயல்களுக்கு நடுவில்,குளக்கரையில் சாஸ் தா ங்கொவில். அந்தக்க்ரைமேலே யே மேற்கு நோக்கி நடந்தால் வீரவனல்லூருக்குப் போகலாம். மேலத் தெருவில் நுழைந்தவுடன் கிருஷ்ணன் கோவில்.மேலத்தெருவின் தெற்க்குப் பகுத்க்கும் வடக்குப் பகுதிகும் இடையில் வரதராஜப் பெருமாள் கோவில். எதிரேயுள்ள குறுக்குச் சந்தில் போனால் சிவன் கோவிலுக்குப் போகலாம்.
(தொடரும்)
Tuesday, October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment