Thursday, October 28, 2010

எங்கள் ஊர் - காருகுறிச்சி.

மேலும் கோட்டுவாத்தியம்,வயலின்,புல்லாங்குழல், வாய்ப்பாட்டு ஆகியவற்றிலும் தேர்ச்சிபெற்றவர்களும் இருந்தன்r. அக்கிரகாரத்தின் இரண்டு தெருக்களிலும் இரண்டிரண்டு வரிசையில் வீடுகள். மேலத்தெருவின் மேல வரிசை வீடுகளின் பின்புறம் சிறிய பாசன வாய்க்கால் ஓடும். அந்த வீடுகளின் பின் வரிசை முழுவதும் தென்னை, மா பொன்று மரங்களும், செடி,கொடிகளும் நிறைந்து நன்றாக இருக்கும். கோயிலிலும் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் திருவிழா தேரோட்டம் எல்லாம் உண்டு.பத்து நாட்க்ள் திருவீதி உலா இருக்கும். வருடத்தில் ஒரு நாள் சிவனும் வீதி உலா வருவார். குளத்தில் பதினோரு மாதங்கள் தண்ணீர் இருக்கும்.ஒரு மாதம் தண்ணீர் இருக்காது. அந்த ஒரு மாதத்தில் தூரெடுத்து குளத்தை ஆழப்படுத்தி புது நீர் வரவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்பார்கள்.சரியாக மே மாதம் ஒன்றாம் தேதி கன்னடியன் வாய்க்காலில் புது வெள்ளம் பாய்ந்து வரும்.ஊருக்கு சற்று தூரத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது.
எங்கள் ஊர் அருகில் புதுக்குடி என்ற்சிறிய கிராமம் இருக்கிறது.இங்கு தரமான மண் பாண்டங்களும் செங்கற்கலும் கிடைக்கும்.பக்கத்திளுள்ள பத்தமடை பாய் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. வீரவநல்லூர், வேஷ்டிகள்,துண்டுகள் தயாரிப்பில் பெயர் வாய்ந்தது.
இப்பொழுது சமீபத்தில் சென்றபோது ஊரில் நிறைய மாற்றம் தெரிந்தது. மண்தெரு சிமெண்ட் சாலையாக மாறியிருந்தது. தாமிரபரமி தண்ணீர் குழாயில் ஊருக்குள் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் அந்தணர்கலளே இல்லை எனலாம்.காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
(முடிந்தது.)

No comments:

Post a Comment