Sunday, October 24, 2010

ஒரு தேடல்.

ஒரு மாலை வேளை.ஏதோ நினைப்பில் இருந்தபோது "கீச் கீச் என்ற் சப்தம் கேட்டது .ஓடிச் சென்று பார்த்தல் அங்கே அது இல்லை.ஒரு கைபேசியின் டயல் டோன் சப்தம்தான் அது. அந்த இனிமையான,உற்சகமான,கல கலப்பான குரலைக் கேட்டு எத்தனை காலமாகிவிட்டது.எங்கே போய்விட்டன இந்த சிட்டுக்குருவிகள்!
நான் முதல் முதலாக சிட்டுக்குருவிகளை கவனிக்கத் தொடங்கியது பத்தாவது வயதில்.அப்பொழுது நாங்கள் பாளையம்கோட்டையில் இருந்தோம் நாங்கள் குடயிருந்த வீடு ஒரு அழகான சிரிய டுப்ளெக்ஸ் மாடல் வீடு.கீழ் பகுதியில் நாங்கள் குடி இருந்தோம்.மாடி காலியாகத்தான் இருந்தது. மாடியில் நிறைய ஜன்னல்கள் இருந்ததால் வெளிச்சமாக இருக்கும்.திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக நிறைய குருவிகள் உள்ளே வந்துவிடும். ஒரே கூச்சல்,கும்மாளம்தான்.ஜோடி ஜோடியாக கூடு கட்டிக் குடியிருக்க போட்டி, சண்டை! நாள் முழுவத்ம் மாலை மங்கும் வரை அவைகளின் கல கலப்பான பெரிரைச்சல்தன். நாங்கள் அந்த கோபாலக்ருஷ்ண பெருமாள் கோயில் தெருவில் இருந்தவரை அந்த இனிமையான தொல்லையை மிகவும் ரசித்தோம்.வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குருவிகள் என் கவனத்தை eerththat நாங்கள் ஹைதராபாத்தில் aththilஇருந்தபோது.கோடைகாலம் வந்து விட்டால் எங்கிருந்தோ ஒரு ஜோடி. இனிய பெருங்குரல் எடுத்து உற்ச்சாகமாய் கத்திக்கொண்டு வந்துவிடும்.எங்கள் வீட்டு மின் விசிறியின் மேல் கோப்பையில் குடியிருக்க இடம் தேடி வட்டமிடும்.
ஒரு வசந்த கால காலை வேளையில் அந்தத் துயர சம்பவம் .நேரிட்டது
ஆசையாகக் கூடு கட்ட வேகமாக பறந்து வந்த பெண் குருவி சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியில் அடிபட்டு துடிதுடித்துpவிழுந்தது.நாங்கள் எதுவும் செய்யுமுன்னரே அது irandhuvittathu. அன்றையப்பொழுது எங்களுக்கு மிகத் துன்பமாகக் கழிந்தது.
நாங்கள் சென்னை கிண்டியில் எங்கள் சொந்த வீட்டிற்கு குடி வந்தபோது ஒரு ஜோடி குருவிகள் எதிர் வீட்டு மாடியில் kudiyiruppadhaik kandom. mikavm makhzhchchiyaka irundhadhu.

thodarum.

No comments:

Post a Comment